www.mykathiravan.com |
myகதிரவன்.கொம் |
|
அபூர்வமான முறையில் குழந்தையை பிரசவித்து இலங்கைப் பெண் சாதனை |
|
|
|
|
|
அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்ற இலங்கை வம்சாவளித் தமிழ்ப் பெண் ஒருவர் கர்ப்பப்பைக்கு வெளியே கருத்தரித்து முழுமையாக வளர்ச்சியடைந்த ஆரோக்கியமான பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார். மீரா தங்கராஜா (வயது 34) என்ற இப்பெண்மணி கர்ப்பப்பைக்கு வெளியே கருத்தரித்து இருப்பது குழந்தையை பிரசவிக்க அவர் அனுமதிக்கப்படும் வரை மருத்துவர்களால் அறியப்படவில்லை. கர்ப்பப்பைக்கு வெளியே கருமுட்டை உற்பத்தி ஸ்தானத்தில் குழந்தை உருவாகி முழுமையாக வளர்ச்சியடைந்து உயிருடன் பிறப்பதானது அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது. இவ்வாறு கருமுட்டை உற்பத்தி ஸ்தானத்தில் குழந்தை உருவானதானது குழந்தையினதும் தாயினதும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாக கருதப்படுகிறது. இத்தகைய நிகழ்வானது நடைபெறக்கூடிய சாத்தியப்பாடானது 0.5 சதவீதம் மட்டுமேயாகும். மேலும் கர்ப்பப்பைக்கு வெளியே சிசு உருவாவது 40000 பேருக்கு ஒருவருக்கே நடைபெறும் செயலாகும். ஆனால் 10 வாரங்களின் முன்பே அதனை வெளியகற்ற நேரிடுவது வழமையாகும். இந்நிலையில் மீரா தங்கராஜா கர்ப்பமடைந்து 38 வாரத்தில் 2.8 கிலோ கிராம் நிறையுடைய ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளமை மருத்துவ உலகையே அதிசயிக்க வைத்துள்ளது. இக்குழந்தைக்கு துர்க்கா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மீரா தங்கராஜாவும் அவரது கணவர் ரவி தங்கராஜாவும் 20 வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து சென்று அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
|
|
|
கர்ப்பிணிகள் மொபைல் போன் பயன்படுத்தினால் ஆபத்து - டென்மார்க் ஆய்வு |
|
|
மொபைல் போன் பயன்படுத்தும் கர்ப்பிணிகள் கதிர்வீச்சால் குழந்தைகளுக்கு கடும் பாதிப்பு கர்ப்பிணிகள் மொபைல் போன் பயன்படுத்தினால், அது கருவில் இருக்கும் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், டென்மார்க்கின் ஆருஸ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு,
கருவில் இருக்கும் குழந்தைகளிடம் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அதே போல, குழந்தைகளில், ஏழு வயதுக்கு குறைந்தோர், மொபைல் போன் பயன்படுத்துவதும்
ஆபத்தானது. அப்படி பயன்படுத்தும் போது, பெரியவர்களை விட, அவர்கள் அதிகளவில் கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
|
|
| முகப்பு | |