www.mykathiravan.com

myகதிரவன்.கொம்

 

எனக்கொரு மகன் பிறப்பான்.....
-------------------------


எனக்கொரு மகன் பிறப்பான் -அவன்
என்னைப்போல இருக்கான்..

ஆமிக்கும் சாமிக்கும் பயந்து ஊரை விட்டுப்போகான்
அடுத்தவர் காணியில் கதியால் தள்ளி நடவான்...

பூனைக்கும் நாய்க்கும் சகுனம் வைத்து
தொடங்கும் முயற்சியை விடமாட்டான்

காதல் அறியாவிட்டாலும்
காமம் எண்ணி அலையான்

வீணுக்குப்போகும் பயல்களுக்காக
வேலியை உயர்த்தி அடையான்


சோத்துக்கு அலையும் பயல்கள் போல்
சோம்பேறி மடத்தில் தங்கான்

நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான்
மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான்

படத்தைப் பார்த்துப் படிப்பான்
பவுடர்ப் பொடிக்கு மயங்கான்

உலகம் போற்றும் சயன்ஸு தெரியாவிட்டாலும்
உயிர்கள் கொல்லும் சைலன்ஸு அறியான்

வெள்ளை வான்கள் அறியா
வெள்ளை மனது கொள்வான்

எனக்கொரு மகன் பிறப்பான் -அவன்
என்னைப்போல இருக்கான்..


-எல்லாள் மஹாராஜா  

முகப்பு
 

  © Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com