தழிழன் மறந்தது ஏன்?

யாருக்கு யார்
சட்டம் போடுவது!
உனக்கு நீ
சட்டம் போட்டுக் கொள்
உன்னை நீ
சீர்திருத்திக்கொள்ள!

எனக்கு நீ
சட்டம் போடாதே
என்னை நீ
அடிமையாக்கிக்கொள்ள!

சிங்கம்
ரரஜாவாகலாம்
காட்டு மிருகங்களுக்கு!
நாட்டில் வாழும்
புத்திஜீவிகளுக்கல்ல!

சக்தியுள்ளவன்
கைகளிலெல்லாம்
எழுதுகோல்
கொடுக்கக்கூடாது
சட்டம் எழுதுவதற்கு!

அது
புத்தி உள்ளவன்
கைகளில்
இருக்கவேண்டும்!

இல்லாவிட்டால்
பைத்தியக்காரன்
கைக் கத்திபோல்
ஆகிவிடும்!

நயவஞ்சகனை
நாம் வெற்றி கொள்ள
நேர்மையும்
உண்மையும்
போதுமா?

வீரமும் வேண்டும்
விவேகமும் வேண்டும்
அத்துடன்
தந்திரம் என்பதும்
வேண்டும்!

தந்திரம் என்பது
அரசியலில்
ஓரு மந்திரம்
இதை
தழிழன் மறந்தது
ஏனோ?




வே.குமாரவேல்