www.mykathiravan.com

நம் தேசம்

 myகதிரவன்.கொம்

மழலைகள் தவழ்ந்த தேசம் இது
மழலை ஒலி கேட்க ஏங்குகின்றதே.....
கண்களைக் கட்டி காட்டிலே விட்டது போல
உரிமையைப்பறித்து உச்சி குளிர்கின்றான் சிங்களவன்

நெஞ்சினில் கனவுகள் சுமந்து
கண்களில் தீப்பொறி பறக்க
இன்னொளியிலே சங்கமமாகின்றன இன்னுயிர்கள்
தனித் தமிழ்த்தேசம் வேண்டி.......

வடக்கென்ன கிழக்கென்ன தெற்கென்ன மேற்கென்ன
நாலாபக்கமும் எத்தனையோ நாடுகள்
தமிழனைக் கொண்ட நாடுகள் எத்தனையோ
ஆனால் தமிழர்களுக்கென்றொரு தேசம்........?

உரிமைப்போரின் உச்சத்திலே உயர்ந்த ஒரு பேரின்பம்,
இன்னல்கள், சித்திரவதைகளை எதிர்கண்ட ஒரு இனத்திற்கு,
ஈழத்தை மீட்டெடுத்து இனியதொரு வழிபடைக்க
காரிருளின் மத்தியிலே கதிரவன் போலொரு தங்கத்தலைவன்!


தேசத்திற்காய் நேசங்கொண்டு புறப்படுகின்றனர்
பல மாவேங்கைகள் தமிழீழம் மீட்க
இதன் நடுவில் தாயின் உயிர் பறிக்க
பகைவனுடன் கூட்டுச்சேரும்
சில ஓநாய்கள் காட்டெருமைகள்

R. துயிலகா