| myகதிரவன்.கொம் | ||
தமிழில் தாய் வாழ்த்து |
||
|
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சிராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமம் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பபமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமை திறம் வியந்து செயலஇமறந்து வாழ்த்துமே! வாழ்த்துமே! வாழ்த்துமே! -"மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை
|
||
| இசைக்கலை வளர்ச்சியும் வரலாறும் | ||
இசையால் வசம் ஆகா இதயமெது? இசைக்கின்றவர்களுக்கும், இன்பம் தந்து ரசிக்கிறவர்க்கும் இன்பம் தருவது இசை. இசையால் நம் முன்னோர்கள் அரும் பெரும் சாதனைகளைச் செய்துள்ளார்கள்.தன்னொத்த அரசனையே எதிர்க்கும் அரசர்கள் கூட யாழ் மீட்டிப்பாடும் பாணர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இலங்கைத் தமிழரும் தென்னிந்தியரும் கர்நாடக இசையையும் வட இந்தியர் ஹிந்துஸ்தானி இசையையும் கையாளுகின்றனர். கர்நாடகம் என்பது பழமையானது. எனவே பழமையான இசை கர்நாடக இசை ஆகும். கருநாடக தேசத்து மன்னன் அழிந்து போகும் நிலையிலிருந்த இவ் இசையை ஆதரித்து வளர்த்தான். இதனால் கருநாடக இசை எனப்பட்டது.உலக இசை அரங்கில் தன்னிகர் சமானயின்றி தலை நிமிர்ந்து நிற்கும் நம் இசைக்கலை லட்சணம், லட்சியம் ஆகிய இரண்டிலும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இசைக்கலையின் தோற்றத்தையும், அது வளர்ச்சியுற்ற வரலாற்றையும் மூன்று காலகட்டங்களாக பிரித்துக் கொண்டு பார்ப்பது பயனளிக்கும்.அவை 1, வரலாற்றுக் காலத்துக்கு முன்னிருந்து கி.பி.5 ஆம் நூற்றாண்டு வரை பரவிய பூர்வ காலம் 2, கி.பி. 6வது நூற்றாண்டு முதல் கி.பி. 15 வது நூற்றாண்டு வரையுள்ள மத்திய காலம். 3, கி.பி. 16வது நூற்றாண்டு முதல் இன்று வரை அடங்கிய நவீன காலம். பூர்வகால இசை முறை பரத முனிவருக்கு முன் கிராம - பூர்ச்சனா - ஜாதி அமைப்பில் வழங்கி வேதப் பாக்கள் போன்றவைகளை அளவுப்படுத்தி இசைப்பதற்கு இக்கலை பயன்பட்ட நிலை.மத்திய கால இசை வளர்ச்சியில் சங்கீத ரத்னாகரம் என்றும் பத்ததி தான்றி இசைக்கலைக்கு தனிச்சோபையை அளிக்கத்தலைப்பட்டது.நவீன கால இசைமுறையில் சிறீ தியாகராஜருக்கு முன் தோன்றிய 72 மேள அமைப்பு முறையினால் கர்னாடக இசைமுறை ஒரு நிறைவையும் நிலையான தன்மையும் கண்டது. 24 மெட்டுக்களுடன் கூடிய தஞ்சாவூர் வீணை வழக்கத்திற்கு வந்தது.நாதத்தின் தன்மையும் நுணுக்கங்களையும் அறிந கொண்ட நமது முன்னோர்கள் தங்களஇ முயற்சியால் நாதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த அபூர்வக் கலையினை ஆதிகாலத்தினின்றே வளர்த்து வந்துன்ளனர். சங்கீதம் சாம கானத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அது படிப்படியாக வளர்ச்சியடைந்து லட்சியம் (Practical), லட்சணம் (Theory) ஆகிய இரண்டிலும் இணைந்து வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு அந்த காலத்தில் வாழ்ந்த இசை வல்லுணர்கள், பக்தி மான்கள், கிரந்தகர்த்தாக்கள், வாக்கேயகாரர்கள், சங்கீத மேதைகள் முதலானோர் காரணமாக அமைந்தனர்.கவிஞர் தாகூர் அவர்கள் இந்த இசையைப்பற்றி மிகவும் சுவை மிக்க கருத்துக்களை பகிர்ந்துள்ளார்." கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்கடுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம் பழிபாவங்களும் நிறைந்த இந்த உலகை விட்டு அழைத்துச் செல்கிறது" என்கிறார். சங்கீத மேதைகள் இசை மன இறுக்கத்தை தளர்த்துகிறது, உற்சாகத்தை உண்டாக்குகிறது, சிந்தனைத் தெளிவு உண்டாக்குகிறது, நோய்களை தீர்க்கிறது, உயிர் அணுக்கள் வரை இசை உதவுகிறது என்று கூறுகிறார்கள்.பக்தி மான்கள் இசை வாழ்க்கையைத் தெய்வீகமாக்குகிறது இசை மூலம் இறைவனை அடையலாம் என்று நிரூபித்துன்னார்கள்.சங்க காலம், தொல்காப்பிய காலம் அதற்குப் பின் வேத காலம், இடைக்காலம் என்றெல்லாம் வரலாற்று காலங்களில் தோன்றிய நூல்கள் எல்லாம் இசையை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே காட்டுகிறது.தமிழ் மூன்று வகை இதில் இசை நடு நிலையில் உள்ளது.இயற்றமிழ் , இசைத்தமிழ், நாடகத்தமிழ்/ / / சத்து சிந்து ஆனந்தம் என்று பொருள்படுகிறது.இப்படியான இசை வரலாற்றில் பிணி தீர்க்கும் இசை என்பது வழக்கமான சங்கீதமோ அல்லது பாடல்களோ அல்ல, அதற்கென்று தனிப்பட்ட சில சாஸ்திரங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. அந்த சாஸ்திர விதிகளின்படிகல்யாணி , வாசந்தி, அனுமத்தொடி, சிவரஞ்சனி, ஆகிய இராகங்கள் மாசுபடாத தானியைக் கொண்டவை. நீலாம்பரி ராகம் சுகமான நித்திரை தரும்.சிறீ ராகம் நல்ல ஜீரன சக்தியைத் தரும். சாமா மன உளைச்லைத் தடுக்கும். சங்கீத சிகிச்சையும் ஒருவகை மருந்தாக பயன்படுகிறது.இப்புவியெங்கும் வழங்கி வரும் இசை முறைகளுக்கெல்லாம் அடிப்படையாய் விளங்குபவை ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களே. இவற்றை பழந்தமிழர்கள் தமிழில் குரல், தத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனுறழைத்தனர்.இப்படியாக இந்த இசைக் கலை வளர்ச்சி, வரலாறு இன்றும் பசுமையுடன், பொலிவுடனும் காணப்படுகின்றது.நன்றி விஜிதா |
||
தொடரும்.... |
||