www.mykathiravan.com

myகதிரவன்.கொம்

info@mykathiravan.com

 

அறிஞர்களின் அமுதமொழிகள்

 

* பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் - தோரோ.

* அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் - நிக்கோபானி.

* ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது - சிம்மன்ஸ்.

* மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது - வில்லியம்டே.

* இதயம் ரோஜா மலராக இருக்கும் போது நினைவும் நறுமணமாகத்தான் இருக்கும் - மெஹர்பாபா.

* இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் - கான்பூசியஸ்.

* பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான் - தாமஸ் கார்னல்.

* ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைïறுகளும், துன்பங்களுமே ஆகும் -

 
 

பொன்மொழிகள்

1 .உண்மையே பேசுங்கள்

கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள்

இந்த இரு வழிகளாலும் ஒருவன் தேவர்களின்

சந்நிதியை அடையலாம்.

 

2 .எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

 

3.நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது நமது முதல் கடமை ஆகும்

ஒருவன்முன்னேற வேண்டுமானல் முதலில் அவனுக்குத் தன்னம்பிக்கையும்,

இரண்டாவது அவனுக்கு இறைவன் மேல் நம்பிக்கையும் வேண்டும்.

 

4 .முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படாததே தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

எல்லா வெற்றிகளும், முன் கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டதன் விளைவே.

நிச்சய வெற்றிக்குத் தெளிவாகத் திட்டமிடுங்கள்.

 

5.வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படும்போது மனதில் வெற்றி பெறவேண்டும் என்று

நெஞ்சம் நிறைய நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் செயல்படுங்கள். நிச்சயம் வெல்வீர்கள்.

 

6.ஒருவன் தியானத்தின் மூலம் முன்னேற முடியும்!

ஆனால் நேர்மையாகச் செய்யப்படும் கர்மயோகத்தால்

பத்து மடங்கு முன்னேற முடியும்!

 

 

7.தன்னம்பிக்கையை மனத்தில் ஊட்டுங்கள்.

ஒவ்வொன்றிலும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

 

8.மனிதனிடம் உள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி,

மற்றும் எந்தத் தீமையைக் காட்டிலும், நன்றி மறத்தலை நான்

நான் ரொம்பவும் வெறுக்கின்றேன். அவை இரத்தத்தையும் பாழாக்குகின்றன.

 

9.அறிவை விட,

வெற்றியைப் பற்றிய

கற்பனை மிக முக்கியம்!

 

10.தோல்வி என்பது, மீண்டும் ஒரு முயற்சியை மேலும் திறமையுடன்

தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு.

 

11.அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம்.

அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டு வந்து தீரும்.

 

12.உன் தீர்மானம் உறுதியாக இருந்தால் அனைத்துத் தடைகளையும்

சமாளித்து நீ விரும்பியதை அடைவாய். அதற்கான சக்தியை உன்

உறுதியான நம்பிக்கையே ஏற்படுத்தித் தரும்.

 

13.ஏழையாய் இருக்காக் கூடாது என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஏழ்மை, மனித இனத்திற்குப் பெரிய எதிரி என்பதை உணர்ந்து உழைப்பைப் பெருக்குங்கள்.

 

14.மனத்திலே தோன்றிய உண்மைகளையும்

நியாயங்களையும் வழக்கத்திலே கொண்டு வர

முயற்சி செய்யுங்கள். எதிலும், எப்போதும்,

யாருக்கும் பயந்தும், மனம் வேறு செய்கை

வேறாகவும் நடிக்கலாகாது!

 

15.முயற்சி செய்யுங்கள்!

தொடர்ந்து தோல்வியடைவதால்

தன்னால் முடியாது என்று

மனம் தளர்ந்து போகாதீர்கள்

நூற்றுக் கணக்காண தோல்விகள்,

எது சரியாகப் பலன் தரும் என்பதை கண்டறிய உதவும்.

            

வள்ளல் பெருமானின் பொன் மொழிகள்

"... காட்டில் சென்று ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்வதில் பெறும் பலன்களை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை நினைப்பதிலும்,அவரை வழி படுவதிலுமே பெற்றுவிடலாம். வேதம், ஆகமம்,புராணம், இதிகாசம் முதலியவற்றில் ஆண்டவனைப் பற்றி உண்மையைத் தெளிவாக விளக்கவில்லை. அவைகளில் ஈடுபடுவதன் மூலமாக அற்ப சித்துகளை வேண்டுமானால் அடையலாம். ஆனால் ஆண்டவனைக் கண்டு அனுபவிக்க முடியாது. ஆகையால் வேதம்,ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகளில் மனதைச் செலுத்தாமல் நேரே ஆண்டவனை வழிபடுவதற்கு முயலுங்கள். சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம்,சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் ஆண்டவனைப் பற்றி ஏதோ ஓரளவு கோடிட்டுக் காட்டி இருக்கிறதே ஒழிய போதுமான அளவு விளக்கமாகச் சொல்லவில்லை. ஆதலால் அதிலும் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்.

''நான் சைவ சமயத்தில் லட்சியம் வைத்திருந்தது போல, வேறு யாரும் வைத்திருக்க முடியாது. நான் அந்த சமயப் பிடியிலிருந்து விலகிய பிறகுதான் ஆண்டவர் ஏறா தலையில் ஏற்றி வைத்திருக்கின்றார். என்னைப் போல் நீங்களும் சமயத் தளைகளை அறுத்துக்கொண்டு நேரே ஆண்டவனை வழிபடும் வழியில் ஈடுபடுங்கள்

நான் இந்த ஏறாத தலையில் ஏறியதற்குக் காரணம் தயவுதான். தயவு என்னும் கருணைதான், என்னைத் தூக்கி விட்டது. அந்தத் தயவிற்க்கு மனதில் ஒருமை வரவேண்டும். தயவு வந்தால் பொரிய மலைமேல் ஏறலாம். தெய்வத்தைத் தொரிந்து கொள்ளாது என்னைத் தெய்வம் என்று மக்கள் நினைந்து சுற்றுகிறார்களே, இந்த வேதனைத் தாங்க முடியவில்லை. சாதாரண மக்கள் தெய்வத்தைத் தொரிந்து கொள்ளாமைக்கு காரணமும் உண்டு. அதன் சுவையைத் தொரிந்துக்கொள்ள, அனுபவிக்க தொரியவில்லை. தெய்வ இச்சை அனுபவிக்கத் தொரிந்துக்கொண்டால் தெய்வத்தினிடம் பிரியம் ஏற்படும். ஆதலால் தெய்வத்தை அனுபவிக்க தொரிந்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் தெய்வத்தை வழிபடுங்கள்.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!


என்னும் மந்திரத்தை ஆண்டவர் வெளிப்படையாக எனக்கு அருளியிருக்கிறார். தயவு கருணை,அருள் என்பன ஒரு பொருளைக் குறிக்கும். அதுவே ஒப்பற்ற தயவுடைய பேரறிவாகும். இதுதான் உண்மை. இதை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் அனுபவித்து மகிழும்படி ஆண்டவர் வருவார். அவர் வந்தவுடன் எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம்! இஃது ஆண்டவான் கட்டளை.''


இவ்வாறு வள்ளல் பெருமான் அருள் உபதேசம் செய்த மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் சித்திவளாகக் குடிலில் தாம் வழிபட்டு வந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவாரின் அருஉருவமான திருவிளக்கைத் தம் குடிலில் இருந்து வெளியே எடுத்து வைத்து, ''இதைத் தடைபடாது ஆராதியுங்கள்; இந்தக் கதவைச் சாத்திவிடப் போகிறேன். ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் இனி கொஞ்ச காலம் எல்லோரும் உங்களுடைய காலத்தை வீணாகக் கழிக்காமல் நான் பாடி இருக்கும் நினைந்து நினைந்து' என்று தொடக்கமுடைய 28 பாசுரங்கள் அடங்கிய பதிகத்தில் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் " என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


வள்ளலாரின் உயரிய கொள்கைகளைப் எல்லா உயிர்களும் அறிந்து உணர்ந்து இன்பப்பேறு பெற வேண்டும.

 

  hits