myகதிரவன்.கொம்

தூண்டிலில் சிக்கிய பெண்கள்...

www.mykathiravan.com

தூண்டிலில் சிக்கிய பெண்கள்...

 

பணக்காரர்கள் பசியைத் தேடி அலைகிறார்கள்; ஏழைகளோ உணவைத் தேடி அலைகிறார்கள். இதுதான் இன்றைய சமூக ஏற்றத்தாழ்வின் அவலம்....

ஏழைகள் வேலைக்குப் போவதா, வேண்டாமா என்பது கேள்வி அல்ல; வேலை பார்த்தால்தான் அடுத்த வேளைக்கு கஞ்சி என்பதே நெருடலான, ஆனால் நிதர்சனமான உண்மை...

தன் அன்றாட ஜீவனத்திற்காக பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயம்.... கடன் நெருக்கடி.... கணவரின் குடிப்பழக்கம் எனப் பல பெண்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உழல்கிறார்கள். விளைவு, அதிலிருந்து விடுபட எந்த ஆதாரத்தையும் பற்றிக் கொள்ளத் துணிகிறார்கள். உணவிற்காக உடல் உறுப்புகளை வியாபாரம் செய்வதற்குக்கூட. பணத்தை இரையாகக் காட்டி சென்னை, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவப் பெண்களை தன் தூண்டிலில் சிக்க வைத்து ஏமாற்றிய சிறுநீரக இடைத்தரகர்களின் மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கூலி வேலையும், மீன்பிடித் தொழிலும் செய்து வந்த பெண்கள் போதிய வருமானம் கிடைக்காததால், தங்களின் வறுமையைப் போக்க கடந்த சில வருடங்களாகவே தங்களுடைய சிறுநீரகத்தை ரூ.15 ஆயிரத்தில் இருந்து

ரூ. 50 ஆயிரம் வரை விற்று வந்திருக்கிறார்கள். ஆனால் சிறுநீரகத்தையும் இழந்து, பேசிய தொகையும் கைக்கு வராமல் தற்போது தவித்து நிற்கின்றனர். ரூ.300க்கும் ரூ. 500க்கும் தங்களது தலைமுடியைக்கூட விற்று பிழைப்பு நடத்துபவர்களும் உண்டு. வறுமையைப் போக்க வழி தெரியாததால் "மண் தின்னும் இவ்வுடலை மனிதன் தின்றுவிட்டுப் போகட்டும் என்ற முடிவுக்கு வந்தோம்' என்னும் இவர்கள் உல்லாச வாழ்க்கைக்காக உடல் உறுப்புகளை விற்கவில்லை. பசி, பட்டினி, கடன் தொல்லை போன்ற கொடிய அரக்கர்களின் பிடியிலிருந்து தப்பிக்க எண்ணியதின் விளைவே இந்த முயற்சி!

இவர்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்தி பணத்தாசை காட்டி ஏமாற்றிய வஞ்சகக் கும்பலை கண்டுபிடித்து களை எடுக்க வேண்டும். இப்பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் இப்பெண்கள் "வாழவாவது' செய்வார்கள்!...

தோழமையுடன்...
கவிதா
இசிரியர்
 

  hits